சென்னிமலை மகா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
ADDED :2541 days ago
சென்னிமலை: சென்னிமலை, காங்கேயம் மெயின் சாலையில் மகா கணபதி கோவில் கும்பாபி ஷேக விழா நேற்று (செப்., 8ல்) நடந்தது. கடந்த, 7 ல் கணபதி யாகத்துடன் பூஜை தொடங்கியது. நேற்று (செப்., 8ல்) யாகபூஜை தொடங்கி, காலை கும்பாபிஷேக விழா நடந்தது.
தொடர்ந்து மகா கணபதிக்கு அபிஷேகம் நடந்தது ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். சென்னிமலை ஆதி சைவ அர்ச்சகர்கள் சங்க தலைவர் தபராஜ் குருக்கள் தலைமையில், சிவாச் சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர்.