வேப்பூர் பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2225 days ago
வேப்பூர்:விருத்தாசலம் அடுத்த தே.புடையூர் அகிலாண்டேஸ்வரி உடனாகிய பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு யானை மீது புனித நீர் கொண்டுவரப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த தே.புடையூர் அகிலாண்டேஸ்வரி உடனாகிய பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று முன்தினம் (செப்., 9ல்), கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று 10ம் தேதி காலை 8:50 மணியளவில் வ.புடையூர் விநாயகர் கோவிலில் பூஜை செய்யப்பட்ட, கயிலாய காசி, கயிலாய கங்கை, விருத்தாசலம் மணிமுக்தாறு ஆகிய நதிகளின் புனித நீர், கலசத்தில் நிரப்பி, யானை மூலம், கோவிலுக்கு கொண்டு வந்தனர். இந்த ஊர்வலத்தில், குதிரை நடன மாடியபடி வந்தது. இதில், கொளஞ்சியப்பர் கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து, விருத்தா சலம் ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த், முன்னாள் சேர்மன் சுந்தரராஜன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.