உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்தவ தேவாலயம் சீரமைப்புக்கு நிதியுதவி

கிறிஸ்தவ தேவாலயம் சீரமைப்புக்கு நிதியுதவி

சென்னை:சென்னையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, சொந்த கட்டடத்தில்  இயங்கும், கிறிஸ்தவ தேவாலயத்தை சீரமைக்க, நிதி தேவைப்படுவோர்  விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை  பழுது பார்த்தல் மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள, அரசால் நிதியுதவி  வழங்கப்படுகிறது.இதன்படி, தேவாலயம், 10 ஆண்டுகளுக்கு மேலாக, சொந்த  கட்டடத்தில் இயங்க வேண்டும். அதேபோல், கட்டப்பட்ட இடம் பதிவு செய்திருக்க  வேண்டும். சீரமைப்பு பணிக்காக, வெளிநாட்டில் இருந்து, எவ்வித நிதியுதவியும்  பெற்றிருத்தல் கூடாது.இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழை,  www.bcmbcmw@tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து,  உரிய ஆவணங்களுடன், சென்னை கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம். தகுதி  அடிப்படையில், நிதியுதவி, தேவாலயத்தின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என,  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !