சபரிமலையில் துறவிகள் தரிசனம்
ADDED :2268 days ago
சபரிமலை, சபரிமலையில் துறவிகள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு மேல்சாந்தி பாதம் பூஜை செய்தார்.
திருக்கேகாட்டு மடம் வாசுதேவபிரமானந்த தீர்த்தர், தெற்கு மடத்தில் வாசுதேவானந்த பிரம்மானந்த பூதி, முஞ்சிறை மடம் பரமேஸ்வர பிரம்மானந்த தீர்த்தர், நடுவில் மடம் அச்சுதபாரதி ஆகிய சன்னியாசிகள் சபரிமலையில் சென்றனர். அவர்களை தந்திரி வாசுதேவன் நம்பூதிரி பாத பூஜை செய்தார். தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு உடனிருந்தனர். தந்திரியின் அறையில் சிறப்பு பூஜை நடத்திய சன்னியாசிகள் தேவாரம் பாடினர். பின்னர் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.