ஈரோடு நாகர் ஆலயத்தில் காயத்ரி ஜெயந்தி
ADDED :2325 days ago
ஈரோடு: காயத்ரி தேவி ஜெயந்தி விழா, காரைவாய்க்கால் நாகர் ஆலயத்தில் நடந்தது. ஈரோடு காரைவாய்க்கால் பகுதியில், சுயம்பு ஸ்ரீநாகர் ஆலயம் உள்ளது. இங்கு காயத்ரி ஜெயந்தி விழா நேற்று 17ல் நடந்தது. இதையொட்டி கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு, விஸ்வகர்ம மற்றும் விஸ்வேஸ்வரர் பூஜை, கணபதி பூஜை, கடம் தீர்த்த சிறப்பு அபிஷேகம், உற்சவருக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், தென்னரசு மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.