காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :2585 days ago
பெரியகுளம் : பெரியகுளம் ஞானாம்பிகா சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாதப்பிறப்பை முன்னிட்டு காளஹஸ்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை அர்ச்சகர் கணேசன் செய்திருந்தார். நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் விசேஷ மஹாமந்திர கூட்டு பிரார்த்தனை நடந்தது. நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் , பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது.