வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகை வழிபாடு
ADDED :2497 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சண்முகப் பெருமான் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார்.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகப் பெருமானுக்கு மகா அபிஷேகம், வெள்ளிகவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மாலை அர்ச்சனை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை, சிவாச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.