வடசென்னிமலை கோவிலில் மண்டல இணை ஆணையர் ஆய்வு
ADDED :2214 days ago
ஆத்தூர்: ஆத்தூர், வடசென்னிமலை கோவில்களில் திருப்பணிகள் குறித்து, இந்து சமய அற நிலையத்துறை சேலம் மண்டல இணை ஆணையர் ஆய்வு செய்தார். சேலம் மாவட்ட, இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் கவிதாப்ரியதர்ஷினி தலைமையில் அலுவலர்கள், நேற்று 19ல், ஆத்தூர், வெள்ளை விநாயகர் கோவிலில் நடக்கும் திருப்பணி, கடைகள், இடங்கள் குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து, வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவில் திருப்பணி, வழிபாடு முறைகள் குறித்து கேட்டறிந்தனர்.
இதுகுறித்து, கவிதாப்ரியதர்ஷினி கூறுகையில், ’பாலசுப்ர மணியர் கோவிலில், மழைக் காலங் களில், மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை சேதமடைகிறது. அதனால், சாலை இருபுறமும் 56 லட்சம் ரூபாயில், கான்கிரீட் தடுப்பு, மழைநீர் வடிகால், வாகன நிறுத்துமிடம் அமைக்க, தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இப்பணி விரைவில் தொடங்கும்” என்றார்.