மேலும் செய்திகள்
குண்ணவாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம்
4904 days ago
குரு வேதானந்த சுவாமிகள் சித்தர் பீட கும்பாபிேஷகம்
4904 days ago
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. இக்கோவிலில் கடந்த 27ம் தேதி பிரம்மோற்சவ விழா துவங்கியது. கடந்த 31ம் தேதி பஞ்சமூர்த்திகளுடன் கோபுரதரிசனமும், 2ம் தேதி திருக்கல்யாணமும் நடந்தது. நேற்று காலை 10.20 மணிக்கு தேரில் மங்களாம்பிகை, கிருபாபுரீஸ்வரர் தம்பதி சமேதராக தேரோட்டம் துவங்கியது. தேரோட்டத்தின் போது மெய்கண்டார் கோவிலில் பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் ஆய்வாளர் செண்பகவள்ளி, செயல்அலுவலர் பத்ராசலம், பேரூராட்சி தலைவர் வெற்றிவேலன், செயல் அலுவலர் விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
4904 days ago
4904 days ago