உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் கோவிலுக்கு மாற்று இடம் வழங்க கோரி மனு

விழுப்புரம் கோவிலுக்கு மாற்று இடம் வழங்க கோரி மனு

விழுப்புரம்: பழமை வாய்ந்த கோவிலுக்கு மாற்று இடம் வழங்க கோரி, தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து ராஜகணபதி கோவில் நிர்வாக குழு செயலாளர் விநாயக மூர்த்தி, விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் அளித்துள்ள மனு:விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு மாதாகோவில் பஸ்நிறுத்தம் அருகில், ராஜகணபதி கோவில் இருந்தது.

கிழக்கு சண்முகபுரம் காலனியின் நுழைவு வாயில் பகுதியில் இருந்த இந்த கோவில், சாலை விரிவுபடுத்தும் பணிக்காக, நெடுஞ்சாலைத்துறையினரால், கடந்த வாரம் அகற்றப்பட்டது.இந்த கோவில், 200 ஆண்டுகால பழமை வாய்ந்தது. இந்த கோவிலுக்கு, கிழக்கு சண்முகபுரம் காலனி யில், வீட்டுவசதி சங்க அலுவலக வளாகத்தில், மாற்று இடம் வழங்கிட ஆவண செய்ய வேண்டும் என்று, மனுவில் கூறப்பட்டுள்ளது.இதேபோல், சட்டத்துறை அமைச்சர், கலெக்டர், நகராட்சி ஆணையர் உள்ளிட்டடோருக்கு, மனுவின் நகல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !