உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இவரைப் போல கடன் பட்டவர் யாருமில்லை!

இவரைப் போல கடன் பட்டவர் யாருமில்லை!

கல்யாணத்திற்காக குபேரனிடம் பதினான்கு லட்சம் தங்க நாணயங்களைக் கடனாக வாங்கியதால் ஏழுமலையானைப் ’பெரிய கடனாளி’ என்று சொல்வதுண்டு. இதற்கான கடன் பத்திரத்தையும் குபேரனுக்கு சுயமாக எழுதியும் கொடுத்தார். இந்த பத்திரத்தில் பிரம்மா, சிவன், அரச மரத்தின் அபிமான தேவதை மூவரும் சாட்சியாக கையெழுத்து இட்டனர். இந்த கடன் மட்டுமில்லாமல் இன்னொரு கடனும் ஏழுமலையானுக்கு தினமும் ஏறிக் கொண்டேயிருக்கிறது. கோவிந்தா என்ற திருநாமத்தை ஒருமுறை சொன்னால் கூட போதும். உடனே அந்த பக்தரிடம் ஏழுமலையான் கடன்பட்டவராக ஆகி விடுகிறார். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் திருமலை எங்கும் கோவிந்தா நாமம் ஒலிக்கிறது. இதனால், எவ்வளவு பெரிய கடனாளியாக ஏழுமலையான் ஆகி கொண்டிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !