அர்த்த பஞ்சகம் என்றால் என்ன?
ADDED :2493 days ago
மகாவிஷ்ணுவை முழுமுதல் கடவுளாக வழிபடுபவர்கள் வைணவர்கள். இவர்களால் சொல்லப்படும் சொல் அர்த்த பஞ்சகம். இதனை ’ஐந்து நிலைகள்’ என்கின்றனர். அவை இறைநிலை அதாவது மகாவிஷ்ணு, உயிர்நிலை (ஜீவன்கள்), கடவுளை அடையும் வழி (உபாய நிலை), அதற்கு தடையாக இருப்பவை (பகை நிலை), கடவுளை அடைந்தபின் அனுபவிக்கும் பயன் (உபயோக நிலை). இவை பற்றிய அறிவை பெற்று பரம்பொருளை அடைவதே மனிதப் பிறவியின் பயனாகும்.