பண்ணாரி அம்மன் உண்டியலில் ரூ.37 லட்சம் காணிக்கை
ADDED :2222 days ago
சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோவில் உண்டியலில், 37.41 லட்சம் ரூபாய், காணிக்கையாக கிடைத்தது.
ஈரோடு மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கோவிலாக, பண்ணாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதம் ஒருமுறை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது. இதன்படி இந்துசமய அறநிலையத்துறை ஈரோடு உதவி ஆணையர் நந்தகுமார், கோவில் துணை ஆணையர் (பொ) சபர்மதி, பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில், 20 உண்டியல்கள், நேற்று திறக்கப்பட்டன. வங்கி ஊழியர், கோவில் பணியாளர்கள், சத்தி தனியார் கல்லூரி மாணவ, மாணவியர் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். பணமாக, 37 லட்சத்து, 41 ஆயிரம் ரூபாய், 331 கிராம் தங்கம், 470 கிராம் வெள்ளி கிடைத்ததாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.