உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிராட்வே கோவில் நிலம் மீட்பு

பிராட்வே கோவில் நிலம் மீட்பு

பிராட்வே:அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் வசித்த, ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி, அதிகாரிகள் கட்டடத்திற்கு, ’சீல்’ வைத்தனர்.

காஞ்சிபுரம், பச்சை வண்ணர் மற்றும் பவள வண்ணர் கோவில், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான, 596 சதுர அடி நிலம், பூக்கடை, பூங்கா நகர் வெங்கி செட்டி தெருவில் உள்ளது.இந்த இடத்தில், சென்னையைச் சேர்ந்த ஷாஜி என்பவர், 20 ஆண்டுகளாக வாடகைக்கு எடுத்திருந்தார். இடத்திற்கான வாடகை சரிவர, வாடகைதாரர் செலுத்தவில்லை. இதையடுத்து, இணை ஆணையர் உத்தரவின்படி, உதவி ஆணையர் ரேணுகா தேவி தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள், பூக்கடை போலீசார் உதவியுடன், கட்டடத்திற்கு, ’சீல்’ வைத்தனர்.இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !