திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் கடிகாரங்கள்
ADDED :2287 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் உப கோயில்களின் உண்டியல்கள் நேற்று துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி, திண்டுக்கல் உதவி கமிஷனர் அனிதா முன்னிலையில் எண்ணப்பட்டன. அதில் ரூ.15 லட்சத்து 416, தங்கம் 110 கிராம், வெள்ளி ஒரு கிலோ 200 கிராம் இருந்தது. சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் ஒன்றில் 18 புதிய கை கடிகாரங்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.