புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் திருப்பணிகள் குறித்து ஆய்வு
ADDED :2196 days ago
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த புதுக்காமூரில் பெரியநாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து, கும்பாபி ?ஷகம் செய்ய அறநிலையத்துறை சார்பில், 95 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, விரைவில் திருப்பணிகள் செய்யப்பட உள்ளது. இதை தொடர்ந்து, விழுப்புரம் இணை ஆணையர் செந்தில்வேலவன் தலைமையில் திருப்பணி குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவர் கூறுகையில், இக்கோவில் பழமையான கோவில் ஆகும். எனவே, தொன்மை மாறாத அளவில் பணிகள் செய்ய விருப்பமுள்ளவர்கள், கோவில் நிர்வாக அலுவலரையும், எங்களையும் அணுகலாம். அதற்காக விரைவில் ஆலோசனை கூட்டம், அமைச்சர் தலைமையில் நடக்க உள்ளது, என்றார்.