108 லிங்கத்துடன் பழநியில் பவுர்ணமி கிரிவலம்
ADDED :2298 days ago
பழநி: பழநியில் இந்து தமிழர் கட்சி சார்பில், 108 லிங்கங்களுடன் மலைக்கோயிலை பக்தர்கள் கிரிவலம் வந்தனர். திருவண்ணாமலை போல பழநி முருகன் மலையை பக்தர்கள் கிரிவலம் வர வேண்டும் என வலியுறுத்தி ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கிரிவல விழா நடக்கிறது.
நேற்றைய விழாவில் பழநி டி.எஸ்.பி., விவேகானந்தன், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராமரவிக்குமார், புலிப்பாணி ஆசிரமம் சிவானந்தபாத்திரசாமி முன்னிலை வகித்தனர். 108 லிங்கங்களுடன், முருகர், விநாயகர், சிவன் வேடமணிந்து குழந்தைகளுடன் பாதவிநாயகர் கோயிலில் இருந்து கிரிவலம் வந்தனர்.