உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பத்தில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

நெல்லிக்குப்பத்தில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

திருப்போரூர்: நெல்லிக்குப்பம், வேண்டவராசி அம்மன் கோவிலில், பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.

திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பத்தில், வேண்டவராசி அம்மன் கோவில் உள்ளது. மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில், இங்கு நடக்கும் வழிபாடு விஷேசம்.அந்த வகையில், புரட்டாசி பவுர்ணமி சிறப்பு வழிபாடு, நேற்று முன்தினம் இரவு, வெகு விமரிசையாக நடந்தது. கோவிலில் உள்ள மூலவர் வேண்டவராசி அம்மன், தங்க கவசத்தில் அருள்பாலித்தார். உற்சவர் அம்மன், மூலவர் சீனிவாச பெருமாள் ஆகியோர், மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு, தாலி சரடுடன் குங்குமம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !