கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்
ADDED :2225 days ago
சரவணம்பட்டி:கோவை சரவணம்பட்டியில் உள்ள திருமகள், நிலமகள் உடனுறை கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று நடந்தது.விழா, கடந்த அக்.,10ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் 5 கால வேள்வி பூஜை, திருவிளக்கு வழிபாடு, திருக்கல்யாண உற்சவத்தோடு பிரம்மோற்சவ விழா நடந்தது. இறுதி நாளான நேற்று காலை கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி, குதிரைகள் சூழ, வாணவேடிக்கைகளுடன், வீதி உலா வந்தார்.சரவணம்பட்டியின் பிரதான ரோடுகளில், பஜனைப்பாடல்களுடன் உலா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.