மகிழ்ச்சிக்கான வழி எது
ADDED :2298 days ago
நாயகத்தின் மனைவி ஆயிஷா அன்றாடம் கணவரின் துணிகளைத் துவைப்பது, அவருக்கு எண்ணெய் தேய்ப்பது, தலை வாருவது, நறுமணம் பூசுவது என பணிவிடைகளை அக்கறையுடன் செய்வார். கணவர் வெளியே சென்று வருவதற்குள், பொருட்களை ஒழுங்குபடுத்தி துாய்மைப்படுத்துவார். அவரைப் போல பெண்கள் வீட்டை பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு பணியிலும் தூய்மை, ஒழுங்கு, அழகு நிறைந்திருக்க வேண்டும். வீட்டிற்குள் நுழைந்தாலே மகிழ்ச்சியான மனநிலை அமையும்.