வேதானந்த சுவாமி குருபூஜை விழா
ADDED :2224 days ago
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, திருவள்ளுவர் நகர் சாலை, வசந்த் நகர் குரு வேதானந்த சுவாமிகளின் 57ம் ஆண்டு குரு பூஜை விழா நடந்தது.
முத்தியால்பேட்டை, திருவள்ளுவர் நகர் சாலை, வசந்த் நகர் குரு வேதானந்த சுவாமிகள் என்ற குரு வேலாயுத ஈஸ்வரருக்கு, 57ம் ஆண்டு குருபூஜையையொட்டி நேற்று காலை புனித கங்கை நீரில் அபிஷேக ஆராதனை நடந்தது.அதையொட்டி, காலை 7:00 மணிக்கு கணபதி பூஜை, யாக பூஜையும், 11:00 மணிக்கு தேவாரம் விண்ணப்பம் வைத்தல், காலை 11:30 மணிக்கு மகா அபிஷேக ஆராதனை, 12:00 மணிக்கு அன்ன சேவையும், மாலை 5:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடந்தது.