கரூர் வெங்கடரமண சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2183 days ago
கரூர்: தாந்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தென் திருப்பதி என அழைக்கப்படும், கரூர், தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி தேர்த்திரு விழா கடந்த மாதம், 30ல், கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து நாள்தோறும், பல்வேறு விசஷே வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடந்தது. கடந்த, 3ல், வெள்ளி கருட சேவை, 6ல் திருக்கல்யாண உற்சவம், 8ல் தேரோட்டம் ஆகிய வைபவங்கள் நடந்தன. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மாலை, சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாளை முத்துப் பல்லக்கு, 19ல், ஆளும் பல்லாக்கு, 20ல், புஷ்ப யாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.