உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் திருப்பவித்ரோத்சவம்

பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் திருப்பவித்ரோத்சவம்

புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், திருப்பவித்ரோத்சவம் நேற்று துவங்கியது. திண்டிவனம்– புதுச்சேரி மெயின் ரோடு, பஞ்சவடீயில், 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் திருப்பவித்ரோத்சவம் நடைபெறும். இந்தாண்டு, திருப்பவித்ரோத்சவம், நேற்று துவங்கியது. இவ்விழா, வரும் 20ம் தேதி வரை, நடக்கிறது.

நேற்று காலை பூர்வாங்க பூஜைகளான அனுக்கை, யஜமான சங்கல்பம், புண்யாஹவாசனம், மிருத்ஸங்கிரஹரணம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி, திவாராதனம், பவித்ர மாலைகள் சாற்றுதல், திருவாராதனம்   சாற்றுமுறை நடந்தது. மாலை, மஹாசாந்தி ஹோமம், திருவாராதனம் சாற்றுமுறை நடந்தது. இன்று 18ம் தேதி காலை 7.௦௦ மணிக்கு நித்ய ஹோமம், பிரதான ஹோமம், மஹாசாந்தி ஹோமம் பூர்ணாஹூதி, திருவாராதனம் சாற்றுமுறை  நடக்கிறது. நாளை 19ம் தேதி புண்யாஹவாசனம், நித்ய ஹோமம், மஹாசாந்தி ஹோமம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை நடைபெறுகிறது. 20ம் தேதி காலை 8.௦௦ மணிக்கு பிரதான ஹோமம், பூர்ணாஹூதி, ஸ்ரீ சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம், தீர்த்தவாரி, யாத்ரா தானம், கடம் ஆலய வலம் வந்து பவித்ர மாலைகள் களைதல், விசேஷ திருவாராதனம், ஆழ்வார், ஆச்சாரியார்கள் மரியாதை, சாற்றுமுறை நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !