ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் நவராத்திரி இசை விழா
ADDED :2283 days ago
கோவை: கோவை, ராம்நகர், ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தின் கலை மற்றும் கலாசார பிரிவு மனோரஞ்சிதம் அமைப்பின் சார்பில்,கோகுலாஷ்டமி, நவராத்திரி இசை விழா நேற்று துவங்கியது.பூஜா சங்கத்தின் கலை மற்றும் கலாசார பிரிவான, மனோரஞ்சிதம் அமைப்பின் சார்பில், கோகுலாஷ்டமி, நவராத்திரி இசை விழா நான்கு நாட்கள் நடக்கிறது. விழாவை, பிரபல இசை விமர்சகர் ரமாதேவி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தின் தலைவர் ஜெகன், செயலாளர் ஆனந்த், துணை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். முதல் நாள் நிகழ்ச்சியில், முரளி மற்றும் குழுவினரின் இசைக்கச்சேரி நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.