உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயில்வேல் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா

மயில்வேல் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா

மதுரை: மதுரை மேலக்கால் மெயின்ரோடு கோச்சடை மயில்வேல் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,28 துவங்குகிறது. இதைமுன்னிட்டு சுவாமிக்கும், வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கும் தினமும் காலை 7:15 மணி, மாலை 5:00 மணிக்கு யாகசாலை நடக்கிறது. அக்.,29 ராஜஅலங்காரம், அக்.,30 மயில்வேல் முருகன் அலங்காரம், அக்.,31 விபூதி அலங்காரம் நடக்கிறது. நவ., 1 இரவு 8:00 மணிக்கு சக்தியிடம் இருந்து வேல் பெறுதல், நவ.,2 காலை 7:15 மணிக்கு அபிஷேகம், மாலை 4:00 மணிக்கு பூப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு, மாலை 5:00 மணிக்கு அங்காள ஈஸ்வரி நகரில் சூரசம் ஹாரம், நவ.,3 காலை 8:00 மணிக்கு சாந்தி அபிஷேகம், மாலை 5:00 மணிக்கு பிரசாதம் வழங்கப்படும். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !