ஆய்க்குடி கோயிலில் நாளை திருவிளக்கு பூஜை!
ADDED :4930 days ago
தென்காசி : ஆய்க்குடி காளகண்டேஸ்வரர் கோயிலில் நாளை (13ம் தேதி) திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஆய்க்குடி சவுந்தர்ய நாயகி உடனுறை காளகண்டேஸ்வரர் கோயிலில் தமிழ் மாதம் முதல் நாள் திருவிளக்கு பூஜை நடப்பது வழக்கம். நாளை (13ம் தேதி) சித்திரை மாத முதல் நாளை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடக்கிறது. அன்று காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலையில் கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடக்கிறது. இரவு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. திருவிளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ளும்படி விழாக் கமிட்டியார் கேட்டுக் கொண்டுள்ளனர்.