திண்டிவனம் ஆஞ்சநேயர் கோவிலில் மகோற்சவம்
ADDED :5301 days ago
திண்டிவனம் : திண்டிவனம் ராஜாங்குளக்கரை ஆஞ்சனேயர் கோவில் லட்ச தீப மகோற்சவம் நாளை துவங்குகிறது. திண்டிவனம் ராஜாங்குளக்கரையில் உள்ள ஆஞ்சநேய மூர்த்திக்கு 68ம் ஆண்டு லட்சதீப உற்சவம் நாளை (13 ம் தேதி) துவங்கி வரும் 20ம் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் மகா அபிஷேக ஆராதனைகளும், 13ம் தேதி முத்துப்பல்லக்கிலும், 14 ம் தேதி சூரிய சாரதி விமானத்திலும், 15ம் தேதி இந்திர விமானத்திலும், 16 மற்றும் 17 ம் தேதிகளில் பல்லக்கிலும், 18 ம் தேதி புஷ்ப பல்லக்கிலும் சுவாமி வீதியுலா நடக்கிறது.தொடர்ந்து 19ம் தேதி புஷ்ப அலங்காரத்தில் தெப்பல் உற்சவம் நடக்கிறது. மறுநாள் 20 ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.