உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூரில் திருக்கல்யாணத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு

கரூரில் திருக்கல்யாணத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு

கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், சுவாமி திருக்கல்யாண உற்சவத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவடைந்தது. கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டி விழா கடந்த அக்டோபர் மாதம், 25ல் துவங்கியது. தொடர்ந்து, முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் (நவம்., 2ல்) மாலை, நான்கு மாட வீதிகளி லும் சூரனை, முருகப் பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. அதைத்தொடர்ந்து, கோவிலில் நேற்று (நவம்., 3ல்) காலை, 11:30 மணிக்கு, முருகப் பெருமானுக்கு வள்ளி தெய் வானையுடன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மஹா தீபாராதனைக்குப் பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !