திருப்பரங்குன்றத்தில் சுவாமிக்கு சாந்தாபிஷேகம்
ADDED :2323 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சாந்தாபிஷேகம் நடந்தது.
உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினர். சுவாமி முன் தங்கம், வெள்ளி குடங்களில் புனித நீர் நிரப்பி சிறப்பு பூஜை நடந்தது. பஞ்ஜகவ்யம், 108 லிட்டர் பால், இளநீர் உட்பட பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து சுவாமிக்கு தங்க குடம், தெய்வானைக்கு வெள்ளி குடத்தில் இருந்த புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சந்தன காப்பு சாத்துப்படியாகி, புஷ்ப அலங்காரத்தில் சுவாமி, தெய்வானை அருள்பாலித்தனர்.