குரோம்பேட்டை, சோழவரம் நகரில் உள்ள, விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2262 days ago
குரோம்பேட்டை : குரோம்பேட்டை, சோழவரம் நகரில் உள்ள, பிரசித்தி பெற்ற வரசித்தி செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று முன்தினம் (நவம்., 3ல்)விமரிசையாக நடந்தது.
குரோம்பேட்டை, சோழவரம் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில், எம்.ஜி.ஆர்., தெருவில், 1979ம் ஆண்டு, ஸ்ரீ வரசித்தி செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனுறை, சுந்தரே ஸ்வரர் சன்னிதி அமைக்கப்பட்டது.
கோவிலை சீரமைத்து, புதிதாக சிலைகள் நிறுவப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் (நவம்., 3ல்) காலை, 7:00 மணிக்கு, அனைத்து சிலைகளுக்கும், நாடி சந்தன ஹோமம், மஹாபூர்ணாஹூதி நடத்தப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.