தஞ்சை 1034வது சதய விழா: ராஜராஜசோழனுக்கு கலெக்டர் மரியாதை
ADDED :2202 days ago
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1034வது சதய விழா நேற்று காலை தொடங்கியது. இவ்விழாவில் கருத்தரங்கம், திருமுறைப் பண்ணிசை, திருமுறை அரங்கம், திருமுறை இசையரங்கம், வயலின் இன்னிசை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சதய விழாவையொட்டி ராஜராஜசோழனின் சிலைக்கு கலெக்டர் அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.