சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2165 days ago
புதுச்சேரி: சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.சாரம் சுப்ரமணியர் சாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 27 ம் தேதி துவங்கியது.
இதையொட்டி அன்று முதல் தினமும் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபி ஷேகம் ஆராதனைகளும், சுவாமி வீதியுலா நடந்து வந்தது. நேற்று முன்தினம் சுப்ரமணியசுவாமி- வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது.நேற்று ஊஞ்சல் உற்சவத்தையொட்டி மாலை 5.00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும், இரவு 7.00 மணிக்கு மகா தீபாரதனை நடந்தது. இரவு 7.30 மணிக்கு சுப்ரமணிய சுவாமி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று சந்தனகாப்பு அலங்காரமும், நாளை விடையாத்தி உற்சவம் நடக்கிறது.