அருணாசலேஸ்வரர் கோவிலில் சனி மஹா பிரதோஷ பூஜை
ADDED :2230 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த, சனி மஹாபிரதோஷ பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சனி மஹா பிரதோஷ பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி, கோவில் கருவறை எதிரே உள்ள அதிகார நந்தி, தங்க கொடிமரம் அருகே உள்ள நந்தியம்பெருமான், ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. அப்போது, ஆயிரக்கணக்கான பக்கர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என, கோஷம் எழுப்பி வழிபட்டனர். பின்னர், பெரிய நாயகர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.