கிரி வலம் தெரியும்.. நதி வலம் தெரியுமா?
ADDED :2254 days ago
தமிழகத்தில் கிரிவலம் பிரபலமாக இருப்பது போல மத்திய பிரதேசத்தில் நர்மதை நதிவலம் பிரபலம். 1300 கி.மீ., தூரம் காலணி அணியாமல் இதை நடந்தே சுற்றுவர். நர்மதை வலத்தை முதலில் துவங்கியவர் மார்க்கண்டேய மகரிஷி. சிரஞ்சீவிகளான பரசுராமர், ஆஞ்சநேயர், அஸ்வத்தாமன், விபீஷணன், மகாபலி, கிருபாச்சாரியார், வியாசர் ஆகியோர் இந்த நதியை சுற்றி வருவோரை காப்பதாக ஐதீகம். இதைச் சுற்ற 3 வருடம், 3 மாதம், 12 நாட்கள் ஆகும். துறவிகளும், நர்மதை நதிக்கரையிலுள்ள கிராம மக்களும் இதில் அதிகம் பங்கேற்பர். அதிகாலையில் நர்மதா என மூன்று முறை உச்சரித்தால் விஷ பயம் ஏற்படாது. மாசி வளர்பிறை சப்தமி திதியன்று நர்மதை ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.