ஆத்ம லிங்கேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி பூஜை
ADDED :2492 days ago
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பார்பட்டியில் உள்ள ஆத்ம லிங்கேஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலையில் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி, தயிர், தேன், மஞ்சள் நீர், புஷ்பம், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. இதைத் தொடர்ந்து சுவாமிக்கு காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. அருகிலுள்ள கூடத்தில் அன்னதானம் நடைபெற்றது. சுற்று பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.