கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சி
ADDED :2328 days ago
கண்டாச்சிபுரம்:கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, ஓதுவார் பழனியாண்டி தலைமை தாங்கினார். ஓதுவார்கள் பார்த்திபன், சந்நியாசி முன்னிலை வகித்தனர். காலை 8:00 மணி முதல் பிற்பகல் வரை திருவாசக முற்றோ தல் நடந்தது. ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆறுமுகம், கணேசன், கல்யாணசுந்தரம் உட்பட ஓதுவார்கள் பலர் பங்கேற்று தேவார, திருவாசகம் மற்றும் அருட்பா பதிகங்களைப் பாடினர். பின்னர் நடைபெற்ற இறைவழிபாடு நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.