கூடலூர் முத்தாலம்மன் கோயில் விழா
ADDED :2262 days ago
கூடலூர்: கூடலூரில் தம்மணம்பட்டி முத்தாலம்மன் கோயில் விழா கொண்டாடப்பட்டது.
அதிகாலையில் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். அம்மன் சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்தார். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந் தது. கோயிலில் பெண்கள் பொங்கல் வைத்து பிரசாதம் வழங்கினர். மாலையில் முளை ப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பக்தர்கள் சுவாமி வேடங்கள் அணிந்து உடன் சென்றனர். தேவராட்டம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்கம், இளைஞர் அணியினர் செய்தனர்.