sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆப்பிரிக்கா

/

தமிழ்ச் சங்கங்கள்

/

ஆப்பிரிக்கா உலக தமிழ் நல சங்கம் - எத்தியோப்பியா

/

ஆப்பிரிக்கா உலக தமிழ் நல சங்கம் - எத்தியோப்பியா

ஆப்பிரிக்கா உலக தமிழ் நல சங்கம் - எத்தியோப்பியா

ஆப்பிரிக்கா உலக தமிழ் நல சங்கம் - எத்தியோப்பியா


மார் 04, 2024

Google News

மார் 04, 2024


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 

ஆப்பிரிக்கா உலக தமிழ் நல சங்கம் - எத்தியோப்பியா: கொள்கைகள் மற்றும் அதன் பணிகள்


1. ஆப்பிரிக்கா மொழிகளிலும், தமிழ் மொழியிலும் உள்ள ஒற்றுமைகளை கண்டறிந்து அதனை உலக தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு சமர்ப்பித்தல்.


2. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள 54 நாடுகளின் தமிழனின் தமிழ் உணர்வுகளை ஊக்குவித்தல், மொழி பற்றி பேணிகாத்தல்.


3. ஆப்பிரிக்கா நாட்டின் பண்பாடும், தமிழரின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றின் ஒற்றுமைகளை கண்டறிந்து அதனை தமிழ்நாட்டு ஊடகங்களில் நேர்காணல் மூலமாக தெரிவித்தல்.


4. தமிழ்நாட்டில் இருந்து ஆப்பிரிக்காவிற்கு தொழில் அல்லது வேலை செய்பவர்களுக்கு ஏதேனும் அவசர மருத்துவ தேவை, முதலுதவிகள் ஆங்காங்கே பல்வேறு குழுவை அமைத்து உதவுதல்.


5. தமிழரின் உணவு முறையையும், ஆப்பிரிக்கா நாட்டினரின் உணவு முறையையும் ஆராய்ந்து பல்வேறு பட்டிமன்றம் மூலம் அதன் முக்கியத்துவத்தை தெரிவித்தல்.


6. தமிழர்கள் இறப்பின், அவர்களை தமிழ்நாட்டின் அரசின் உதவி மூலமாகவும், இந்திய தூதரகங்கள் மூலமாகவும் தாய்நாட்டிற்கே அனுப்பி வைத்தல்.


7. தமிழ் வளர்க்க தமிழ் ஆன்லைன் வகுப்புகள் (ழுடெடிநெ ஊடயளள) அமைத்தல். அனைத்து தமிழர்களின் பண்டிகைகளையும், வழிபாட்டையும் ஒரு விழாவாக எடுத்து ஆப்பிரிக்கா நாட்டில் நடத்துதல்.


8. ஆப்பிரிக்கா பாரம்பரிய முறையையும், தமிழ்நாட்டின் பாரம்பரிய முறையான ஜல்லிக் கட்டையும் ஒன்றாக நடத்தி தமிழரின் வீரத்தையும், ஆப்பிரிக்கரின் வீரத்தையும் உலகிற்கு எடுத்துரைத்தல்.


9. தமிழ் பாட்டும் மெல்லிசையும், ஆப்பிரிக்கா பாடல்களையும் ஒன்றாக இணைத்து ஒரு புதுவிதமாய் பாடல்களை உலக மக்களுக்கு சமர்ப்பித்தல்.


10. திருக்குறள் மற்றும் ஐம்பெரும் காப்பியங்களில் உள்ள வாழ்வுமுறை நெறிகளை ஆப்பிரிக்க மொழியில் மொழிபெயர்த்து ஆப்பிரிக்கா மக்களுக்கு சமர்ப்பித்தல்.


11. தமிழ்நாட்டில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் மற்றும் உலக நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்களும், ஆப்பரிக்கா தொல்பொருள், இனம், மொழி ஆகியவற்றை ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு கூடமாக அமைத்து இந்தியாவின் சிறந்த பல்கலைகழகத்தின் புரிந்துணர்ந்த ஒப்பந்தம் செய்தல் மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல்.


12. ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள மக்களுக்கு தமிழ் மற்றும் தமிழ் சார்ந்த கலாச்சாரம் கற்றுக்கொடுத்து, அதில் தேர்ச்சி பெற்றவர்களை தமிழ் ஆசிரியர்களாக நியமித்து தமிழை வளர்த்தல்.


13. ஆப்பிரிக்காவில், தமிழ்நாட்டில் உள்ள சித்தா, யுனானி, ஆயுர்வேதம் போன்ற இயற்கை வைத்தியத்தை கற்றுக்கொடுத்தல். தமிழ்நாட்டின் கை வைத்தியம், குடும்ப பாடல்கள், கிராமிய பாடல்கள், தாலாட்டு பாடல்கள், நடனம், கூட்டு வாழ்வுமுறைகள், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சார முறை இது போன்ற ஏனைய நற்பண்புகளை பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாதம் ஒருமுறை நிகழ்ச்சியாக நடத்துதல்.


14. தமிழ்நாட்டில் உள்ள அரிசி மூலம் கோளங்கள் போடும் பழக்கத்தினை ஆப்பிரிக்கா மக்களிடம் கொண்டு செல்லுதல். இதன் மூலம் அனைத்து உயிர்களையும் நேசிக்கும் என்ற ஒரு உயர்குணத்தை கற்றுக் கொடுத்தல்.


15. எவ்வாறு பொங்கல் தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறதோ அதனை போன்ற விழாக்கல் ஆப்பிரிக்காவிலும் கொண்டாடப்படுவதால் அதனை உலக மக்களுக்கு கட்டுறையாக தெரிவித்தல்.


16. தமிழ்நாட்டில் முருகனை வழிபடுவதை போல ஆப்பிரிக்கா நாட்டில் முரு என்ற கடவுளை வழிபடுவதை உலக மக்களிடம் கொண்டு செல்லுதல்.


17. ஆப்பிரிக்கா மொழியிலும் தமிழ் மொழியிலும் உள்ள ஒற்றுமைகளை எடுத்துரைத்தல்.


- தினமலர் வாசகர் பேராசிரியர் முனைவர். கிருஷ்ணராஜ் ராமசாமி, ஆப்பிரிக்கா உலக தமிழ் நலச்சங்க தலைவர்




Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us