/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அல்-அசா தமிழ்ச் சங்கம் விருது வழங்கும் விழா

மே 26, 2024

சவுதி அரேபியா, மே 24, 2024 வெள்ளிக்கிழமை அல்-அசாவில் உள்ள சல்காரா உணவகத்தில், நடந்து முடிந்த 2024 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா அல்-அசா தமிழ்ச் சங்கம் சார்பாக சிறப்பாக நடைபெற்றது.
அல்-அசா தமிழ்ச் சங்க நிர்வாக உறுப்பினர்கள் முனைவர் நாகராஜன் கணேசன், முனைவர் பரமசிவன், ஜஸ்டின், ரவூப் மற்றும் ஆயிஷா முக்தார் வரவேற்று பேசினர். சிறப்பு அழைப்பாளராக போன வருடம் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி சாயிதா அதிபா ஆல்வி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.
2024 வருடம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடப் பிரிவில் அதிக மதிப்பெண் பெற்ற அல்-அசா மாடர்ன் சர்வதேச பள்ளி தமிழ் மாணவர் பவுல் ரிச்சர்ட்க்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முனைவர் பரமசிவன், முனைவர் நாகராஜன் கணேசன், ரவூப் மற்றும் ஜஸ்டின் செய்திருந்தனர்.
இறுதியில் நன்றி உரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
- நமது செய்தியாளர் சிராஜ்
Advertisement