/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத்தில் தூய்மையே சேவை சிறப்பு நிகழ்ச்சி
/
குவைத்தில் தூய்மையே சேவை சிறப்பு நிகழ்ச்சி
அக் 02, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத் : குவைத்தில் தூய்மையே சேவை சிறப்பு நிகழ்ச்சிக்கு இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்திய அரசின் சார்பில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை தூய்மையே சேவை விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குவைத் இந்திய தூதரகத்தில் தூய்மையே சேவை சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா தலைமை வகித்தார். அவரது தலைமையில் தூதரக அதிகாரிகள் தூய்மையே சேவைக்கான உறுதிமொழி ஏற்றனர். பின்னர் தூதரக வளாகத்தை அவர்கள் சுத்தம் செய்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement