/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அமீரக இந்திய தூதர், துணைத் தூதருடன் இந்திய சமூக அமைப்புகள் ஆலோசனை
/
அமீரக இந்திய தூதர், துணைத் தூதருடன் இந்திய சமூக அமைப்புகள் ஆலோசனை
அமீரக இந்திய தூதர், துணைத் தூதருடன் இந்திய சமூக அமைப்புகள் ஆலோசனை
அமீரக இந்திய தூதர், துணைத் தூதருடன் இந்திய சமூக அமைப்புகள் ஆலோசனை
மார் 03, 2026

அமீரக இந்திய தூதர், துணைத் தூதருடன்இந்திய சமூக அமைப்புகள் ஆலோசனை
அபுதாபி : அமீரகத்துக்கான இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல், துணைத் தூதர் சதீஷ் குமார் சிவன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகளுடன்அபுதாபி அய்மான் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜூம் இணைய வழியாக சந்தித்து பேசினர்.அமீரகத்தில் தற்போதுள்ள கால கட்டத்தில் இந்திய சமூகத்திற்கு உதவும் வகையில் இந்த சந்திப்பு நடந்தது.
அப்போது பேசிய இந்திய தூதர் தீபக் மிட்டல், ஐக்கிய அரபு அமீரக அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அனைத்து இந்தியர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.அபுதாபி, இந்திய தூதரகம் மற்றும் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் 24 மணி நேரமும் இந்திய சமூகத்திற்கு உதவ தயாராக இருக்கிறது.விசிட் விசா விரைவில் காலாவதியாக உள்ளவர்களுக்கு, நிலைமை சீராகும் வரை எந்த கட்டணமும் இன்றி விசாவை நீட்டிக்க வேண்டும் என்று அமீரக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்திய சமூகத்தினர் பதற்றமடைய வேண்டாம். அரசு இந்திய சமூகத்திற்கு எல்லா விதமான ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது என்றார். மேலும் இந்தியர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு இந்திய சமூக அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-- நமது வாசகர் ஜமாலுத்தீன்
Advertisement

