/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ரியாத்தில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார்
/
ரியாத்தில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார்
ரியாத்தில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார்
ரியாத்தில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார்
மார் 09, 2026

ரியாத்தில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார்
ரியாத்தில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மார்ச் 6, வெள்ளிக்கிழமை இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் - ரியாத் மத்திய மண்டலம் சார்பாக நடைபெற்றது. இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பங்களுடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி தொடக்கமாக ஹாஃபிழ் முஹம்மது தவ்ஃபீக் புகாரி இறைவசனம் ஓதி தொடங்கி வைத்தார், தொடர்ந்து நல்லூர் மசூது ஜின்னா வரவேற்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து மெளலவி முஹம்மது “ரமலான் மாதத்தின் சிறப்புகள்” என்ற தலைப்பில் மார்க்க உரையாற்றினார். பின்னர் நல்லூர் ரஹ்மத்துல்லா சமூக நல்லிணக்கத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். மனிதர்கள் அனைவரும் ஒரே மனித குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், சமூக ஒற்றுமையை மேம்படுத்துவது இவ்வகை நிகழ்ச்சிகளின் நோக்கம் என்பதையும் அவர் வலியுறுத்தினார். மேலும் தாயகத்திலும் அயல் நாடுகளிலும் நடைபெறும் சமூக சேவைகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய தூதரகத்தின் துணை அதிகாரி சபீர் சமூக அமைப்புகள் செய்து வரும் பணிகளை பாராட்டி, அவை மேலும் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் தெரிவித்தார்.
மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஜுபைல் மாநகர இஸ்லாமிய அழைப்பாளர் மெளலவி அன்சார் ஹுசைன் ஃபிர்தெளசி சிறப்பு உரை நடைபெற்றது. ரமலான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளின் படி நோன்பு கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் அவர் எடுத்துரைத்தார்.நிகழ்ச்சியின் நிறைவில் ஆர்.எஸ். மங்களம் சைபுல்லாஹ் நன்றியுரையாற்ற, கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
- ரியாத்தில் இருந்து ஆரிப் அப்துல் சலாம்
Advertisement

