/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஜிசான் தமிழ் சங்கம் சார்பில் சமுதாய நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி
/
ஜிசான் தமிழ் சங்கம் சார்பில் சமுதாய நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி
ஜிசான் தமிழ் சங்கம் சார்பில் சமுதாய நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி
ஜிசான் தமிழ் சங்கம் சார்பில் சமுதாய நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி
மார் 09, 2026

ஜிசான் தமிழ் சங்கம் சார்பில் சமுதாய நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி
ஜிசான் தமிழ் சங்கத்தின் சார்பாக வெள்ளிக்கிழமை (06/03/2026) அன்று சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஜிசான் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் இஃப்தார் நோன்பு திறந்தனர். அனைத்து மத சகோதரர்களுடன் இஃப்தார் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு சமுதாய ஒற்றுமையின் முக்கியத்துவம் வெளிப்படுத்தினர்.
இந்த இப்தார் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த ஜிசான் தமிழ் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களின் சேவை அனைவராலும் பாராட்டப்பட்டது. சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பங்கேற்ற அனைவரிடமும் வரவேற்பைப் பெற்றது.
- ஜெத்தாவில் இருந்து தினமலர் செய்தியாளர் எம்.சிராஜ்
Advertisement