sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

சிங்கப்பூர்

/

செய்திகள்

/

சிங்கப்பூரில் மூத்த தமிழறிஞரின் நூல்கள் அறிமுக விழா

/

சிங்கப்பூரில் மூத்த தமிழறிஞரின் நூல்கள் அறிமுக விழா

சிங்கப்பூரில் மூத்த தமிழறிஞரின் நூல்கள் அறிமுக விழா

சிங்கப்பூரில் மூத்த தமிழறிஞரின் நூல்கள் அறிமுக விழா


பிப் 17, 2025

Google News

பிப் 17, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைசிறந்த ஆய்வாளரும், மூத்த தமிழறிஞருமான அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானாவின் நூல்கள் அறிமுக விழா சிங்கப்பூரில் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அலி மௌலானா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பொறியாளர் வா.ச நிஜாமுதீன், புதுவை மத்தியப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் அ.ஷேக் அலாவுதீன், காயல்பட்டினம் நலச்சங்கம் முன்னாள் தலைவர் வாவு ஷாஹுல் ஹமீத் ஷாஜஹான், இந்திய முஸ்லிம் சமூக வழிகாட்டுக் குழுத் தலைவர் முஹம்மது கௌஸ் முன்னிலை வகித்தனர்.

சிங்கப்பூர் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் அ.முஹம்மது இர்ஷாத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூர் கிளைத் தலைவர், முனைவர் மு.அ. காதர், மூத்த ஊடகவியலாளர் முஹம்மது அலி, சிராங்கூன் டைம்ஸ் இதழின் ஆசிரியர் ஷாநவாஸ் வாழ்த்துரை வழங்கினர்.


நிகழ்வின் முத்தாய்ப்பாக ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அலி மௌலானா, சிங்கப்பூர் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் அ.முஹம்மது இர்ஷாத் ஆகியோர் இணைந்து ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மௌலானா எழுதிய நாயகர் பன்னிரு பாடல், ஈழவள நாட்டிற் பயிர்பெருக்க வாரீர், குறிஞ்சிச் சுவை, பாலைவனம், சிறார் பாடல்கள், பாத்திமா நாயகியார் மாலை, அப்பாஸியாக்கள், உமர் ரலி புராணம், அற்புத அகில நாதர், குத்புகள் திலகம் யாஸின் ரலி வரலாறு, மஹானந்தலங்கார மாலை உள்ளிட்ட 11 நூல்களை அறிமுகப்படுத்தினர்.


நூலாசிரியர் கலீல் அவ்ன் மௌலானா எழுதிய “ஈழவள நாட்டிற் பயிர்பெருக்க வாரீர்” எனும் நூல் 1967ஆம் ஆண்டு “இலங்கை சாகித்திய மண்டல விருது” பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நூல்கள் குறித்த ஆய்வுரையை கவிமாலை காப்பாளர் மா. அன்பழகன், ஜாமியா சிங்கப்பூர் அற நிறுவன சமய நல்லிணக்கப் பணி மூத்த இயக்குநர் முனைவர் எச். முஹம்மது சலீம் ஆகியோர் வழங்கினர்.


சமூகத் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், பல்வேறு சமூக நல சேவையாளர்கள் பலர் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை அப்துல் சுபஹான் வழிநடத்தினார். படம்: விழா ஏற்பாட்டுக் குழு


- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us