/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூரில் வேல் மாறல் மற்றும் திருப்புகழ் வழிபாடு
/
சிங்கப்பூரில் வேல் மாறல் மற்றும் திருப்புகழ் வழிபாடு
சிங்கப்பூரில் வேல் மாறல் மற்றும் திருப்புகழ் வழிபாடு
சிங்கப்பூரில் வேல் மாறல் மற்றும் திருப்புகழ் வழிபாடு
பிப் 21, 2025

சிங்கப்பூரில் வேல் மாறல் மற்றும் திருப்புகழ் வழிபாடு வெகு விமரிசையாக நடத்தப்பட்டுள்ளது. முதன்முறை வேல்மாறல் பாராயணம் சிங்கப்பூரில் அறிமுகம் காண ஆதரவுதந்து ஏற்பாடு செய்த பெருமை சிங்கப்பூர் இந்து சபையினரையும் வேல் முருகன் வழிபாட்டுக் குழுவினரையும் சாரும். இதுவரை காணாத அளவில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலய வளாகத்தில் உள்ள பிஜிபி திருமண மண்டபத்தின் கீழ்த்தளத்தில் நடந்த இந்நிகழ்வில் 800 பேர் கலந்து கொண்டு கந்தப்பெருமானின் அருள்பெற்றது வியக்கத்தக்கதாக அமைந்தது.
தமிழகத்திலிருந்து முனைவர் இரா. விஜயகுமார் அவர்தம் துணைவியார், மற்றும் சில உதவியாளர்களுடன் வந்திருந்து இந்நிகழ்வுக்காகத் தருவிக்கப் பெற்றிருந்த முருகப்பெருமானின் வேல் வைத்து அபிஷேகம் செய்து, முருகப்பெருமானைப் போல் அலங்காரம் செய்து முறையான வழிபாடு செய்து தந்தது மட்டுமல்லாது, விளக்கவுரைகளையும் வேல்மாறல் பாராயணத்தின் பலன்கள் குறித்த விளக்கவுரைகளையும் தந்தது கலந்துகொண்ட பக்தர்களை வெகுவாக கவர்ந்ததோடு அனைவரும் எழுந்து நின்று அரகரோகா பாடலுக்கு தலைமேல் கைதூக்கி தாளம் போட வைத்தது. பக்திப்பரவசமூட்டிய அரியதோர் நிகழ்ச்சி.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு வேல் மாறல், கந்தர் அனுபூதி, அருணகிரிநாதன் அருளிய திருப்புகழ் அடங்கிய புத்தகம், திருச்செந்தூர் முருகப் பெருமானின் விபூதி அடங்கிய கைப்பை ஒன்றும் அன்பளிப்பாக வழங்கினர். மதிய உணவும் வழங்கப்பட்டது. அனைத்து செலவுகளும் தொண்டர்களின் நிதி அன்பளிப்பினால் சாத்தியமானது. வேல்மாறல் வழிபாட்டு நிகழ்ச்சி ஒவ்வோராண்டும் நடைபெறும் என்றும் வேல் மாறல் குறித்த வகுப்புகளும், குழு வழிபாட்டு நிகழ்ச்சிகளும் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தலைவர் ஜோதிநாதன் அறிவித்தார். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement