/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி பெரு விழா
/
சிங்கப்பூர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி பெரு விழா
பிப் 28, 2025

சிங்கப்பூர் ஆலயங்களில் மஹா சிவராத்திரிப் பெருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் பிரதமர் கலந்து கொண்ட பிரம்மாண்ட மஹா கும்பாபிஷேகத்திற்குப் பின்னர் நடைபெறும் முதல் விழாவாக மஹா சிவராத்திரிப் பெரு விழா அமைந்ததால் பக்தர்கள் நிரம்பி வழிய நான்கு காலமாக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முதல் காலம் இரவு 7.30 மணி முதல் 9.30 மணி வரை சிறப்பு அபிஷேகம். ஆராதனை அலங்காரம் நடைபெற்றது. இரண்டாம் காலம் இரவு 10.30 முதல் 12.30 வரை நடைபெற்றது. நள்ளிரவு 2.30 முதல் 3.30 வரை மூன்றாம் கால பூஜையும் வகையில் 4.30 முதல் 6.30 வரை அர்த்த ஜாம வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெற்று நித்திய பூஜை தொடர்ந்தது.
முதல் காலத்தில் ஸ்ரீ சோமாஸ்கந்தராகவும் இரண்டாம் காலத்தில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியாகவும் மூன்றாம் காலம் லிங்கோத்பவராகவும் எழுந்தருளிக் காட்சி அருளியதற்கு மெய் சிலிர்க்க வைத்தது. நான்காம் கால நிறைவில் சுவாமி ரிஷப வாகனத்தில் சர்வ அலங்கார நாயகராக ஆலயம் வலம் வந்து அருள் பாலித்தார். ஒவ்வொரு கால நிறைவிலும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது
சர்வ சாதகம் சிவாகம பெருமணி சிவஸ்ரீ நாகராஜ சிவாச்சாரியார் பூஜைகளை மிகச் சிறப்பாக நடத்தினார். ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சுரேஷ் குமார் தலைமையில் மிகச் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
- நமது செய்தியாளர் வெ. புருஷோத்தமன்
Advertisement