/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
இலக்கியவனம் நிகழ்ச்சியும், பாண்டியன் தமிழ் பேச்சாளர் மன்ற அறிமுக நிகழ்ச்சியும்
/
இலக்கியவனம் நிகழ்ச்சியும், பாண்டியன் தமிழ் பேச்சாளர் மன்ற அறிமுக நிகழ்ச்சியும்
இலக்கியவனம் நிகழ்ச்சியும், பாண்டியன் தமிழ் பேச்சாளர் மன்ற அறிமுக நிகழ்ச்சியும்
இலக்கியவனம் நிகழ்ச்சியும், பாண்டியன் தமிழ் பேச்சாளர் மன்ற அறிமுக நிகழ்ச்சியும்
மார் 04, 2025

தமிழ் ஆர்வலர்களின் நல்லாதரவோடு சிங்கப்பூர் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தால் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலக்கியவனம் நிகழ்ச்சியும், பாண்டியன் தமிழ் பேச்சாளர்மன்ற அறிமுக நிகழ்ச்சியும், யூடீ இந்தியர் நற்பணி செயற்குழு ஆதரவுடன் (Yew Tee IAEC) மிகச்சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி நெறியாளராக குந்தவை ஜமால் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளராக கீசகன்சுரேஷ் செயல்பட்டார்.
தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் ஹரிகிருஷ்ணன் முத்துசாமி வரவேற்று சிறப்புரையாற்றினார். யூடீஇந்தியர் நற்பணி செயற்குழு மன்றத் தலைவர் PBM கிளமென்ட் சந்துருவுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியின் முதல் அங்கமாக பாண்டியன் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, தமிழ்ப் பேச்சாளர் மன்றங்களின் மாவட்ட இயக்குனர் மைக்கேல் ஜோசப் வசம் புதிய மன்றத்தின் பதாகைகளை ஒப்படைத்தார். மாவட்ட இயக்குனர் மைக்கேல் ஜோசப், தமிழ்ப் பேச்சாளர் மன்றங்களின் முன்னாள் மாவட்ட இயக்குனரும் தற்போதைய பாண்டியன் தமிழ்ப் பேச்சாளர் மன்றத் தலைவருமான பாரதி செல்வனிடம் மன்றத்தின் பதாகைகளை வழங்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
DTM சுந்தரராமன் ஆனந்தனின் தயாரிக்கப்பட்ட உரையினைத் தொடர்ந்து மூன்றாவது அங்கமாக அரங்கப் பேச்சு நிகழ்ச்சியை உமாசங்கர் நாராயணன் வட்டாரவாசிகளுக்கு பேச வாய்ப்பளித்து நகைச்சுவையாக நடத்தினார்.
நிகழ்ச்சியின் நான்காவது அங்கமாக இலக்கிய வனம் - நான்மணிக் கடிகை நிகழ்ச்சியினை இலக்கியவாணி முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் துவக்கினார். இந்நிகழ்வு 20 -வது இலக்கியவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதம் நான்மணிக்கடிகை என்ற நூலைக் கருப்பொருளாகக் கொண்டு இலக்கியவனம் நிகழ்வு நடந்தது.
முனைவர் சரோஜினி மிகச் சிறப்பான வகையில் நான்மணிக்கடிகை பற்றிய அறிமுகத்தோடு அருமையாக இலக்கியவனத்தைத் தொடங்கி வைத்தார். அவர் பேச்சாளர்களை அறிமுகம் செய்து வைக்க பேச்சாளர்கள் மாணிக்கவாசகம், ஹேமாசுவாமிநாதன், சௌம்யலட்சுமி, அகிலா முத்துக்குமார். உமாசங்கர் ஆகியோர் மேடைக்கு வந்து நான்மணிக்கடிகையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடல்களை இலக்கியச் சுவை சற்றும் குறையாமல் மிகவும் திறம்பட எளிமையான முறையில் நகைச்சுவையோடும் நளினத்தோடும் விளக்கினர். 50 -க்கும் மேலாக திரளாக வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் இந்த பேச்சாளர்களின் இலக்கிய மழையில் நனைந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.
நிகழ்ச்சியின் இறுதி அங்கமாக நன்றியுரையினை ஒருங்கிணைப்பாளர் கீசகன் சுரேஷ் வழங்கினார். பின்பு இரவு விருந்து மற்றும் குழு புகைப்படத்துடன் பாண்டியன் தமிழ்ப் பேச்சாளர் மன்ற அறிமுகக் கூட்டமும், இலக்கியவனம் நிகழ்ச்சியும் இனிதே நிறைவடைந்தது. அடுத்த இலக்கியவனம் நிகழ்ச்சி ஜூன் மாதம் நடைபெறும் என ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்தனர்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement