உள்ளூர் செய்திகள்

முத்துக்கள் மூன்று

* நல்ல எண்ணம், நல்ல சொல், நல்ல செயல் மூன்றும் முத்துக்கள் போன்றவை.* பேசும் இடத்தில் பேசி விடுங்கள்; இல்லையெனில் தவறாக சித்தரிக்கப்படுவீர்கள்.* குடும்பத்தை முதலில் மகிழ்ச்சிப்படுத்துங்கள். பின்னர் சமூகத் தொண்டாற்றலாம். * வெளிப்படையாக பேசுபவர்கள் மனதில் எதையும் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. * ஆத்திரம் அறிவை மறைக்கும்; அழிவைத் தரும்.* கேட்டால் மட்டும் பதில் சொல்லுங்கள். * நினைத்தது நடந்தால் ஆண்டவர் உங்கள் பக்கம் இருப்பதாக பொருள். * பசிப்பவனுக்கு நல்ல கனிகளை கொடுப்பவரே நல்லவர். * யாராக இருந்தாலும் அளவோடு பழகுவது நிம்மதிக்கான வழி.