துக்கம் சந்தோஷமாய் மாற...
UPDATED : ஜன 12, 2024 | ADDED : ஜன 12, 2024
* உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாற வேண்டுமா... எப்போதும் நம்பிக்கையுடன் செயல்படுங்கள். மனத்திருப்தி அடையாதவர் உண்மையான சந்தோஷத்தை பெற முடியாது. * பணம், வெற்றி இரண்டையும் பேராசையுடன் தேடாதீர்கள். மீறினால் துன்பமே மிஞ்சும்.* அன்றாட கடமைகளை சரியாக செய்யுங்கள். புத்துணர்வு அதிகரிக்கும். * தேவையான பொருள் அடுத்தவரிடம் இருந்தால் அதை அவரிடம் கேட்டுப் பெறுங்கள்.* மனதை எப்போதும் லேசாக வைத்துக் கொள்ளுங்கள். எதையும் எளிதில் கடக்கலாம்.* நல்ல புத்தகம் நுாறு நண்பர்களுக்கு சமம்.* நடந்ததை நினைத்து வருந்தாதீர். நடக்கப்போவதில் விழிப்பாய் இருங்கள்