இருப்பதை இழக்காதே
UPDATED : செப் 22, 2023 | ADDED : செப் 22, 2023
* இல்லாதவற்றை எண்ணி இருப்பதை இழக்காதே. * உனக்கான பணியை சரியாகச் செய்.* நல்லது எனப்பட்ட விஷயமே பின்னர் தீமையாக தெரியும். * சம்பாதித்த பணத்தில் உறவினர், சகோதரருக்கு கொடுத்து உதவு.* யாரிடமும் மரியாதையை கேட்டுப் பெறாதே. * நல்ல எண்ணம் நல்ல வாழ்வுக்கான அஸ்திவாரம். * வாடிக்கையாளரை சார்ந்தே வியாபாரம் அமைய வேண்டும்.* முடிந்தளவுக்கு விமர்சனம் செய்வதை தவிர். * பசித்தவருக்கு உணவு கொடு.* பிறர் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படாதே.